உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது. இதில் வார்டு 33 யில் நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர்  ஆனந்த் மோகன் இ.ஆ.ப, துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன, கூட்டத்திற்கு அப்பகுதி கவுன்சிலர்களும் மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் அரசின் உதவித்தொகைகள்  குறித்தும் தெரிவித்த கருத்துக்கள், கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக ஏற்று பதிவு செய்யப்பட்டது. 


மேலும் பொதுமக்களிடமிருந்து தங்கள் பகுதிக்குட்பட்ட அடிப்படை தேவைகள் குறித்தான எழுத்துப்பூர்வமான கோரிக்கை விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யப்பட்டது. 



No comments:

Post a Comment