உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி வார்டு பகுதி குழு கூட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி வார்டு பகுதி குழு கூட்டம்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டு தாராவிளை பகுதியில் பகுதி குழு கூட்டம் கூட்டத்தின் தலைவரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது இதில் பகுதி குழு உறுப்பினராக சிவராஜன், ரமேஷ், ராதாகிருஷ்ணன், செந்தில் செயலாளராக சுகாதார ஆய்வாளர் ராஜா பகுதி கிராம நிர்வாக அலுவலர்  கலந்து கொண்டார்கள்;

கூட்டத்தில் பகுதியில் உள்ள 125 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் 45 மனுக்கள் பெறப்பட்டன இதில் குறிப்பாக தம்மத்து கோணம் சானல்கரையில் அமைந்துள்ள மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் சார்பாக மனு தாராவிளைமுதல் பூவன்குடியிருப்பு செல்லும் சாலை பழவிளை கல்வியல் கல்லூரி செல்லும் சாலை தாராவிளை முதல் பழவிளை காமராஜ் தொழில்நுட்ப  கல்லூரிக்கு செல்லும் சாலை ஐயப்பன் வீட்டு செல்லும்தெரு முருகன் வீடு செல்லும் தெரு வெங்கடேசன் வீடு செல்லும் தெரு நாராயணன்வீடு செல்லும் தெரு மற்றும் பல தெருக்கள் மண் தெருக்களாகவும்,குடிநீர்திட்ட பணிக்கு  தோண்டப்பட்டு பணி முடிந்த பிறக்கும் அந்தத்தெரு சரியாக முடிக்கவில்லை என்றும், புதிய தெரு விளக்கு  அமைக்க வேண்டும் என்றும்  பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. 

No comments:

Post a Comment