ஆயுர்வேத மருத்துவம் பற்றி பள்ளிகளில் தனி பாடத் திட்டம் கொண்டு வரவேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

ஆயுர்வேத மருத்துவம் பற்றி பள்ளிகளில் தனி பாடத் திட்டம் கொண்டு வரவேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

photo_2023-01-29_23-03-39

ஆயுர்வேத மருத்துவம் பற்றி பள்ளிகளில் தனி பாடத் திட்டம் கொண்டு வரவேண்டும் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி: சர்வதேச ஆயுர்வேத மருத்துவ மாநாட்டின் தொடக்க விழா கன்னி யாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர அவைக்கூடத்தில் நடந்தது. கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்வதேச ஆயுர்வேத மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவம் ஆகும். உலக அளவில் ஆயுர்வேத மருத்துவத்திற்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக ஆயுர்வேத மருத்துவமும் திகழ்கிறது.


tamilaga%20kural

பள்ளிகளிலும் ஆயுர்வேத மருத்துவம் பற்றி தனி பாடத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான் ஆயுர்வேத மருத்துவத்துக்குஅதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவ பாடத்தை படிப்பதற்கும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சுரேஷ் உன்னிதன் வரவேற்று பேசினார். விவேகானந்தர் கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்ட செயலாளர்வாசுதேவ் பழங்குடியினர் அறக்கட்ட ளை தலைவர் ஜெகதீஷ் மிஸ்ரா, பேராசிரியர் சிலிப்பி ரஸ்தோகி, ஜெயஸ் சங்கவி, பியூஸ்மூண்டா, டாக்டர் மனோஜ் குமார்உள் பட பலர் கலந்து கொண்டு பேசினர். 


முடிவில் டாக்டர் ராஜேந்திரன் நன்றி கூறினார். மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment