நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை  விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்


கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்கா விளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஷ் நர்சிங் கல்லூரி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பல விதத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். 


அந்த மாணவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த நிலையில், கல்லாரி நிர்வாகம் மாண வரிடம் இது போல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டு சிகிச்சைக்கு பணம் கொடுத்து வழக்கை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது. அதுவும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தொழிலாளி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சுமித்திரன் (வயது 19) கல்லூரியில் 2 ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர்க ளுக்கு தங்குவதற்காக விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்திரன் தங்கியுள்ளார். இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 4 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது. 


எப்போதும் குதூகலமாக இருக்கும் சுமித்திரன் சக மாணவர்களிடம் பேசாத தால் சந்தேகமடைந்த வர்கள் சுமித்திரனிடம் கேட்ட போது ஒன்றும் கூறாமல் இருந்துள்ளான். 

No comments:

Post a Comment