
இந்த ஆண்டு தூக்க நேர்ச்சை நிறைவேற்ற 1,352 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யபட்டுள்ளது. இதையொட்டி நேற்று நேர்ச்சை குழந்தைகளும் தூக்கக்காரர்களும் குலுக்கல் முறையில் வரிசைபடுத்தபட்டனர். விழாவில் அம்மன் தூக்கம், பண்டார தூக்கம், பிடாகை தூக்கம், அரசு தூக்கம், 30 ரிசர்வ் தூக்கம் என மொத்தம் 1,386 தூக்கம் நடைபெறும். குடும்பத்தினர் மற்றும் ஊரார் முன்னிலையில் நேர்ச்சை குழந்தைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட தூக்கக்காரர்களுக்கு தூக்க ரதத்தில் ஏற உடல்நலம், குடும்ப நலன் சார்ந்த இடையூறுகள் ஏற்பட்டால் ரிசர்வ் தூக்கக்காரர்கள் மூலம் அந்த நேர்ச்சை நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு மொத்தம் 1,386 தூக்கம் உள்ளதால் ஒரு ரதத்தில் 4 பேர் வீதம் 346 முறை ரதம் கோவிலை வலம் வரும். இதனால் காலையில் தொடங்கும் தூக்க நேர்ச்சை நள்ளிரவை கடந்து நடைபெற வாய்ப்புள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சீனிவாசன் தம்பி, இணை செயலாளர் பிஜூ, துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment