கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையத்தில் எல்லைப் பகுதியில் இரவு ரோந்து பணியில் அலட்சியம் காட்டக்கூடாது - போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 June 2023

கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையத்தில் எல்லைப் பகுதியில் இரவு ரோந்து பணியில் அலட்சியம் காட்டக்கூடாது - போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை.


குமரி மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசார் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். விருப்ப பணியிடம் அடிப்படையில் பலருக்கும் அவர்கள் கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஆயுதப் படையில் புதிதாக 55 போலீசார் சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ளனர். இவ்வாறு பணி மாறுதல் பெற்றுள்ள போலீசாருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-


ஆயுதப்படை போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன். ஆயுதப்படைக்கும் போலீஸ் நிலைய பணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஆயுதப்படையில் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே சென்றிருப்பீர்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் அப்படி இருக்காது. மக்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் செல்ல வேண்டி இருக்கும். பொறுமையாக செயல்பட வேண்டும். மக்களுக்கு எந்தவாறு நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கடுமையாக பேசக்கூடாது. பொறுமையாக இருந்தாலே பல பிரச்சினைகள் வராது. பணி மாறுதல் பெற்றுள்ள வர்களின் செயல்பாடுகள் 6 மாதம் தொடர்ந்து கண் காணிக்கப்படும். பணியில் சரியாக செயல்படவில்லை என்றால் பாரபட்சம் இன்றி மீண்டும் அவர்கள் ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 


இரவு நேர ரோந்து பணியில் அலட்சியமாக இருக்கக்கூடாது. பண பிரச்சனைகள். சொத்து பிரச்சனைகளில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதீர்கள். பண மோசடி வழக்கில் உரிய ஆதாரம் இருந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிலபிரச்சனையை பொறுத்தவரை டாக்குமெண்ட் சரியானதுதானா? நிலத்தின் உரிமையாளர் உண்மையில் யார்? என்பதற்கான ஆதாரம் சரிபார்க்க வேண்டும். அவ்வாறு மோசடி நடந்திருப்பது உறுதியானால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையில் வருகிறார்கள்.


அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு தினமும் ½ மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து போலீசரும் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டு பைக் ஓட்டி சென்றார். அவர் உடனடி யாக சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார். எனவே பெண் போலீசார் உள்பட அனைத்து போலீசாரும் சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு ரோந்து பணியிலும் அலட்சி யம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment