அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 22 September 2023

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள்.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


- கன்னியாகுமரி செய்தியாளர்  என். சரவணன் 

No comments:

Post a Comment