அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 6 September 2023

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார்.

சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துடன் தான் மோத வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதை தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல. உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தி உதயநிதி ஸ்டாலின்க்கு கொலை மிரட்டல் விடுத்த உத்திரபிரதேச சாமியார் பரம்ஹன்ஸை கைது செய்ய வலியுறுத்தி  அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய  தி மு க  சார்பில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கன்னியாகுமரி தி மு க இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எண் பொன் ஜான்சன். தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பா.பாபு . தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் ஜாண்சன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்மாறன், வினோத், மெல்பின், ஒன்றிய தி மு க நிர்வாகிகள் அகஸ்தியலிங்கம், பாலசுப்ரமணியன், பிரேமலதா, எட்வின் ராஜ்,சந்திரசேகர், நாகமணி, கவுன்சிலர்கள் பிரைட்டன்,பூலோக ராஜா, தாமஸ், இந்திரா, நிர்வாகிகள் சேகர்,கிருஷ்ணகுமார், ஷியாம்,கார்த்திக் உட்பட ஏராளமான திமுகவினர் திரண்டு காவல் நிலைய அதிகாரியிடம் மனு அளித்தனர். 

No comments:

Post a Comment