குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நியமனம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 September 2023

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நியமனம்.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் எஸ்.ஏ.அசோகன். ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி என இரண்டாக பிரிந்தபோது அசோகன் ஓ.பி.எஸ். அணியில் இடம் பெற்றார். இதையடுத்து மாவட்ட செயலாளர் இல்லாமல் செயல்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். 


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக நிய மிக்கப்பட்டுள்ள தளவாய் சுந்தரம், தமிழக அரசின் முன்னாள் சுகாதார துறை அமைச்சராகவும், பொதுப் பணி துறை அமைச்சராகவும், எம்.பி.யாகவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment