மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளின் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நட்டு தூய்மையான சூழலை உருவாக்கிட முன்வர வேண்டும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,பேச்சு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 12 September 2023

மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளின் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நட்டு தூய்மையான சூழலை உருவாக்கிட முன்வர வேண்டும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,பேச்சு.

 

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளின் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நட்டு தூய்மையான சூழலை உருவாக்கிட முன்வர வேண்டும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,பேச்சு.


கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் வனத்துறையின் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  மாவட்ட வன அலுவலர் ம.இளையராஜா,  முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டு. துவக்கி வைத்து பேசுகையில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் சுற்றுசூழல் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வனத்துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


குறிப்பாக காற்று மாசு, மியா வாக்கி காடுகள் வளர்த்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு. வன விலங்குகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தி பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் வளர்க்கவும், நல்ல முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாக இன்று எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது பள்ளிகள் தோறும் தூய்மையை தொடருவோம் வாருங்கள் என்பதாகும். 


எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வகுப்பறையில் உள்ள காகித குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பள்ளி வளாகத்தில் இருக்கும் குப்பைகளை பார்க்கும் யாராக இருந்தாலும் அந்த குப்பைகளை குப்பைக்தொட்டிகளில் போடுவதோடு. சக மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுபோன்று கழிவறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் உறவினர் சுற்றத்தாரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


மேலும் வனத்துறை சார்பாக பள்ளி வளாகங்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக மரங்கள் நடுவதினால் தூய்மையான காற்றை நாம் சுவாசிக்கலாம். எனவே மாணவர்களாகிய நீங்கள் சுற்றுச்சூழலை பேணிக்காப்பதற்கு பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  பேசினார்.


நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் .மோகன், பள்ளி தலைமை ஆசிரியை .சி.ஜமினா. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் .எஸ்.மலர்விழி. ஆசிரியர்கள். மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment