கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 17 October 2023

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி ஒரே நேரத்தில் 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 


இதில் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார்கள். இந்த பரத நாட்டியத்தில் கலந்து கொண்ட நடன பெண் கலைஞர்களுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். 


நிகழ்ச்சியில் கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் கேமதர் ரெட்டி, கோவில் சேவகர்கள் ஜெய ராம், கண்ணன், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் சிவகு மார் மற்றும் திருமலை திருப்பதி தேவ ஸ்தான விஜி லென்ஸ் அதிகாரி விஷ்ணு ராம், கண்காணிப்பாளர் லட்சுமிபதி,பாஜ.இளைஞரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment