குமரியில் தொடரும் பாலியல் தொல்லைகள் - அலட்சியத்தில் அரசு ஊழியர்களா? - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 November 2023

குமரியில் தொடரும் பாலியல் தொல்லைகள் - அலட்சியத்தில் அரசு ஊழியர்களா?

நாகர்கோயில், அரசு பேருந்தில் விதவை பெண்ணுக்கு ஓட்டுனர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை.! புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விதவை பெண் குற்றச்சாட்டு.!


தாழாக்குடியை சேர்ந்த விதவை பெண் ஒருவர் தனியார் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். அவர் தினமும் பணிக்கு வருவதற்கும் பணி முடிந்து செல்வதற்கும் தாழக்குடி தேரூர் 33 வழித்தட பேருந்தில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த பேருந்தில் தாழாக்குடியை சேர்ந்த தனேஷ் குமார் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவர் மேற்படி விதவைப் பெண்ணிடம் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக அத்துமீறி துன்புறுத்தி வந்துள்ளார். 


அதை பலமுறை தனேஷ் குமாரிடம் எச்சரித்தும் அவர் கேட்காததால் ஒரு பெண் வழக்கறிஞர் மூலம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு புகார் கொடுத்து அவரிடம் தொலைபேசி வாயிலாக முறையிட்டதும். தனேஷ் குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பதாக மேற்படி  தாழக்குடி தே 33 வழித்தடத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு மாற்று வழித்தடத்திற்கு சென்றுள்ளார். 


மீண்டும் கடந்த வாரம் முதல் தாழக்குடி தேரூர் 33 வழித்தடத்திற்கு  தனேஷ்குமார் மாற்றப்பட்டு மேற்படி விதவைப் பெண்ணிடம் நீ என்ன ஒன்னும் பண்ண முடியாது 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன் மீண்டும் இந்த வழித்தடத்தில் டிரைவராக வந்து விட்டேன் உன்னை அடையாமல் விடமாட்டேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.


உடனடியாக பாதிக்கப்பட்ட விதவைப் பெண் ராணி தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக குமரி மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்று முறையிட சென்றுள்ளார் அங்கு அவரை உள்ளே அனுமதிக்காத பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி வெளியே அனுப்பி உள்ளார் உடனடியாக பொது மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட விதவைப் பெண் பேசியபோது பொது மேலாளர் நான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நீ தான் உன்ன பாதுகாத்துக் கொள்ளணும் உனக்கு மட்டும் தான் பாலியல் தொல்லை இருக்கிறதா என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை புறம் தள்ளியதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து பொது மேலாளர் பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்தி உள்ளார். 


இது சம்பந்தமாக தானும் தனது இரண்டு குழந்தைகளும் விஷம் கொடுத்து சாக முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கு சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தனேஷ் குமாரும் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரும் காரணம் என மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய புகார் மனுவில் பாதிக்கப்பட்ட விதவைப் பெண் தெரிவித்துள்ளார். 


அரசு பேருந்தில் ஏழை எளிய பெண்கள் மட்டுமே பயணம்  செய்கின்றனர் அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்க வேண்டிய ஓட்டுநர் இது போன்று எல்லை மீறி நடந்து கொள்வது அரசு பேருந்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொது மேலாளரும் இதுபோன்று புகாரை புறந்தள்ளி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் ஓட்டுநர்களுக்கு துணை போவது மேலும் பல பெண்களுக்கு ஓட்டுநரை பாலியல் செய்ய தூண்டும் எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பெண்கள் நல ஆர்வலர்கள் அரசுக்கும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


குமரி மாவட்டத்தில் குலசேகரம் மூகாம்பிகை மெடிக்கல் காலேஜ் கோட்டார் ஆயுர்வேத மெடிக்கல் காலேஜ் உள்ளிட்ட கல்லூரியில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி குமரி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

No comments:

Post a Comment