தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 17 December 2023

தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகப்படியான நீரினை வெளியேற்றுவதில் ஏற்படும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு.பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீரினை இன்று காலை 08.30 மணிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து 3000 கன அடி நீரும் பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மேலும் கூடுதலாக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேலும் கூடுதலாக நீர் வெளியேற்றபட வாய்ப்புள்ளது.எனவே தாமிரபரணி ஆறு மற்றும் இதர ஆறுகளின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


- கன்னியாகுமரி செய்தியாளர். சரவணன் 

No comments:

Post a Comment