ஆசாரிப்பள்ளம் பெல்ஃபீல்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 2023-2024- ஆம் ஆண்டிற்கான வருடாந்திர விளையாட்டு விழா நிகழ்ச்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 10 January 2024

ஆசாரிப்பள்ளம் பெல்ஃபீல்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 2023-2024- ஆம் ஆண்டிற்கான வருடாந்திர விளையாட்டு விழா நிகழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பெல்ஃபீல்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 2023-24-ம் ஆண்டிற்கான வருடாந்திர விளையாட்டு விழா நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. கொடியேற்றத்துடன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ராணுவ நடனம், ஏரோபிக் நடனம், தடகளப் நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் சர்வதேச தொழில்நுட்ப அதிகாரியும் உலக தடகள பயிற்சியாளருமான டாக்டர். பிரிட்டோ ராய்  தலைமை  தாங்கினார், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர். ஜேம்ஸ் ஆர். டேனியல் தொடக்க உரை ஆற்றினார் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரைபிள் கிளப் அரசு தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஜெ. அர்னால்டு,  மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், மாவட்ட உடற்கல்வி அலுவலர். நாராயணன், தடகள சங்கத்தின் மாவட்ட செயலாளர் காட்வின் ஜாண் ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியினை பள்ளி தாளாளர் ஜி.ரஸ்கின் ராய், பள்ளி முதல்வர் டாக்டர்.ஜேன் கேத்தரின் ரஸ்கின், முன்னாள் துணை முதல்வர் லீமா ரோஸ் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து  நடத்தினார்கள்.  இதில் அனைத்து மாணவ மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment