வாட்சப்பில் அவதூறு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 March 2024

வாட்சப்பில் அவதூறு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!


மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குறித்து திங்கள் நகர் பணிமனை கிளை மேலாளர் மகேஷ் வாட் ஸ்சாப்பில் தவறான கருத்து பதிவு செய்ததை கண்டித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய இரணியல் காவல் துறையை வலியுறுத்தி திங்கள் நகர் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு குருந்தன் கோடு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், பா.ஜ.க மாநிலசெயலாளர்உமாரதிராஜன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர். காந்தி, திங்கள்நகர் கவுன்சிலர்கள் குமரன், ஜெயசேகரன், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் கோபு, ஒன்றிய பொருளாளர் பிரேம்,ரெத்தினபாண்டியன் உட்படபலர் கலந்து கொண்டு பேசினார். ஆர்பாட்டத்திற்க்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment