மின்னல் வேகத்தில் அந்த கதவின் விளிம்பு பகுதி பைக்கில் வந்த ஜெஸ்டின் டேவிட்சனின் கழுத்தை அறுத்தது. பைக்கும், வேனும் சென்று கொண்டி ருந்தபோதே மின்னல் வேகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்துபோன ஜெஸ்டின் டேவிட் தனது பேரக்குழந்தையுடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். கழுத்து அறுபட்டதால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜெஸ்டின் டேவிட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக ஜெஸ்டின் டேவிட் உடன் வந்தகுழந்தை மயிரிழையில் காயமின்றி உயிர் தப்பியது. இது குறித்து தகவலறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டேவிட் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment