மின்சார வாரியர்கள் வெட்டும் மரக் கிளைகளை அப்புறப்படுத்துவது யார்?
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதிகளில் மின்சார வாரியம் சார்பில் பராமரிப்பு பணிக்காக மின் இணைப்பை துண்டித்து மின்சார ஒயர்களின் அருகில் செல்லும் மரக்கிளைகளை வெட்டினர் .
அதன் பிறகு வெட்டிய மரக்கிளைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலையில் போட்டு செல்கின்றனர்.
கேட்டால் அதனை மாநகராட்சி அப்புறப்படுத்தும் என கூறுகின்றனர்.
மாநகராட்சியாளர்களிடம் இது பற்றி கேட்டபோது எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறுகின்றனர்.
இதை யார் தான் அப்புறப்படுத்துவது?
மரக்கிளைகளை சாலையோரங்களில் போட்டு செல்வதால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆதலால் இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment