மரணக்குழியாக மாறும் நெடுஞ்சாலை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தாலுக்கா திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திற்பரப்பு களியல் குலசேகரம் நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் விழுந்து மழை தண்ணீர் கெட்டி வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்ல முடியாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டு தடுமாறித்தான் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். பல அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுலா வாகனங்கள் செல்லக்கூடிய சாலை. அதனால் இந்த சாலை பரபரப்பாக காணப்படும். இந்த சாலையை உடனே செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது உடனே சரி செய்யப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment