பூதப்பாண்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.!!!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தெற்கு அரசன் குழியில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட இருந்தது. இதுகுறித்து பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், கவுன்சிலர் ஜெசி தம்பி, மாவட்ட திமுக பிரதிநிதி டேவிட் கென்னடி, சகரியா உட்பட பலர் நேற்று பூதப்பாண்டி வட்டாட்சியர் மற்றும் பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்து டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடை திறப்பது நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட நிருபர் N.T.சரவணன்
No comments:
Post a Comment