கள்ளக்காதலி வீட்டில் பிணமாக கிடந்த கார் டிரைவர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 9 August 2024

கள்ளக்காதலி வீட்டில் பிணமாக கிடந்த கார் டிரைவர்.


கள்ளக்காதலி வீட்டில் பிணமாக கிடந்த கார் டிரைவர்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கரும்பாறை காலனியை சேர்ந்தவர் மோகன் (42) இவர் கார் டிரைவர். இவருக்கு ரோனிகா மாதா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகன் உள்ளனர். மோகனுக்கும் பத்மநாபபுரம் பகுதி சேர்ந்த பிரேமா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளனர்.         இந்த சம்பவம் மோகன் மனைவிக்கு தெரிய வந்து, பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த  நிலையில் நேற்று இரவு மோகன்  வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மோகன் மறுபடியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.       இந்த நிலையில் மோகன் பிரேமாவின் வீட்டில் உடல்நலம் இல்லாமல் கிடப்பதாக ரோனிகா மாதாவிற்கு செல்போனில் தகவல் கிடைத்துள்ளது. இதை கேட்டு ரோனிகா மாதா உடனே உறவினர்கள் உதவியுடன் பிரேமாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மோகன் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.      மேலும் இது தொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் ரோனிகா மாதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் ரோனிகா மாதா புகார் செய்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் N.T.சரவணன்

No comments:

Post a Comment