பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 September 2024

பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம்.

 


பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம்.


குமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்கள், அவ்வழியே வந்த இலவச அரசு பேருந்தை கைகாட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்ற சம்பவத்தில், இளைஞர்கள் சிலர் பேருந்தின் பின்னால் சென்று, பஸ்சை தடுத்து நிறுத்தி டிரைவரை அறிவுறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அந்த பேருந்தின் டிரைவர் ஸ்டீபன் மற்றும் கண்டக்டர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment