கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்கா அருமனை அருகே டெம்போ மீது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. இருவர் படுகாயம். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாறப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் விஜின்,அகில், பிரதிஸ். நண்பர்களான இவர்களில் இருவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றனர். இன்று மதியம் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் குலசேகரம்-அருமனை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குலசேகரம் நோக்கி டெம்போ ஒன்று சென்று கொண்டிருந்தனர். மாறப்பாடி பகுதியில் வளைவான பகுதியில் பைக் சென்ற போது எதிரே வந்த டெம்போ மீது மோதியது. இதில் மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் விஜின் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெம்போ ஓட்டுனரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment