மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்- போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 August 2022

மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்- போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை.

நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அஞ்சு கிராமம் புது குடியிருப்பை சேர்ந்த ஆம்ஸ் நல்லதம்பி (வயது 45) என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் ஆம்ஸ்நல்லத்தம்பி 7-ம் வகுப்பு மாணவியிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 


இதையடுத்து அந்த மாணவி சக ஆசிரியையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வகுப்பறையில் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. 


இதையடுத்து ஆம்ஸ் நல்லதம்பி மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment