கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு இருமுடி கட்டுடன் பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர். பாதயாத்திரையின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட ரதமும் சென்றது. கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை சுசீந்திரம், வந்தடைந்தது பின்பு குமரி மாவட்ட பாஜக பொருளாளர் டாக்டர்.முத்துராமன் தலைமையில் பாதயாத்திரைக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் முன்னால் சேர்மன் மீனாதேவ் மாவட்ட துணைத்தலைவர் தேவ், திருமடங்களின் மாநில அமைப்பாளர் காளியப்பன் , மாநில செயலாளர் உமாராஜன் ஆகியோர் பாதயாத்திரையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த பாதயாத்திரை வருகிற 9–ம் தேதி பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்று அடைகிறது.

No comments:
Post a Comment