நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தருகிறார்.முதலமைச்சர் வரும்போது நாகர்கோவில் மாநகர பகுதியில் இனிவரும் ஐந்து ஆண்டுகளில் என்னென்ன பணிகள் நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவை என்பதை பட்டியலிட்டு அவர்களிடம் கோரிக்கையாக வைத்து அந்த நிதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் அகற்றப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

No comments:
Post a Comment