உலக இருதய தினம் மற்றும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பில் மினி மாரத்தான் போட்டி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 September 2022

உலக இருதய தினம் மற்றும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பில் மினி மாரத்தான் போட்டி.

நாடு முழுவதும் செப்டம்பர் 29 - ஆம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவில் அருகில் மறவன்குடியிருப்பு  பகுதியில் உள்ள கால்வின் தனியார் மருத்துவமனை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலக இருதய தினம் மற்றும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி கால்வின் மருத்துவமணை நிறுவனர் கால்வின் மற்றும் விளையாட்டு அலுவலர்  டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.


இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள். கால்வின் மருத்துவமனையில் இருந்து  தொடங்கி பீச் ரோடு சந்திப்பு , செட்டிகுளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு, மணிமேடை  வழியாக  அண்ணா விளையாட்டு அரங்கில் ஓட்டத்தை 10 கீலோ மீட்டர் தூரம்  நிறைவு செய்தனர். 

No comments:

Post a Comment