மங்களூரு- நாகர்கோவில் (16605) ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 19, 22, 26 மற்றும் 29-ந் தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும், அதாவது, திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்- மங்களூரு (16606) ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும், அதாவது நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படும்.
நாகர்கோவில்- மங்களூரு (16650) பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20, 23, 27 மற்றும் 30-ந் தேதிகளில் காலை 5. 40 மணிக்கு புறப்படும். அதாவது 95 நிமிடம் தாமதமாகும், நாகர்கோவில்- திருநெல்வேலி (06641) ரெயில் 25-ந் தேதியும் (06642) திருநெல்வேலி- நாகர்கோவில் ரெயில் 26-ந் தேதியும் ரத்தாகிறது.
தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா (20691) அதிவேக ரெயில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும், இந்த ரெயில் திருநெல்வேலி நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்- தாம்பரம் அந்த்யோதயா (20692) அதிவேக ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும், திருவனந்தபுரம்-திருச்சி (22628) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.
மறு மார்க்கமாக (22627) திருச்சி - திருவனந்தபுரம் ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும், சென்னை சென்டிரல்- நாகர்கோவில் (12689) வாராந்திர அதிவேக ரெயில் 23-ந் தேதி சென்னை சென்டிரல்- நாகர்கோவில் (12689) வாராந்திர அதிவேக ரெயில் 23-ந் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.
நாகர்கோவில்-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவேக ரெயில் 25-ந் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும், புதுச்சேரி- கன்னியாகுமரி வாராந்திர ரெயில் 26-ந் தேதி திருநெல்வேலி வரையும், கன்னியாகுமரி புதுச்சேரி வாராந்திர ரெயில் 26-ந் தேதி திருநெல்வேலியில் இருந்தும் புறப்படும், என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment