லாரியை கயிறு கட்டி இழுத்து சாதனை புரிந்தவருக்கு, குமரி எம். பி. விஜய் வசந்த் பாராட்டு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

லாரியை கயிறு கட்டி இழுத்து சாதனை புரிந்தவருக்கு, குமரி எம். பி. விஜய் வசந்த் பாராட்டு.

photo_2022-09-19_14-59-32
குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உலக சாதனை செய்யும் வகையில் லாரி ஒன்றை கயிறு மூலம் இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். 


இதை கன்னியாகுமரி எம். பி. விஜய்வசந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாதனை செய்த கண்ணனுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை அவர் வழங்கி பாராட்டினார். 


இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள விஜய்வசந்த் எம்.பி. தனது உடல் மற்றும் தசை பலத்தால் பல சாதனைகளை புரிந்து வரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், இன்று 13. 5 டன் எடை கொண்ட லாரியை 4 நிமிடங்களில் தனது கரங்களால் 111 மீட்டர் இழுத்து சென்று சாதனை செய்துள்ளார். 


அவரால் தமிழகத்திற்க்கும், குமரி மாவட்டத்திற்கும் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment