நவராத்திரி விழா: 23-ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக - கேரளா அமைச்சர்கள் துவக்கி வைப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

நவராத்திரி விழா: 23-ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக - கேரளா அமைச்சர்கள் துவக்கி வைப்பு.

photo_2022-09-19_15-40-54
தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. 


பின்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது விழாவும் திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது, இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது பரம்பரையாக நடந்து வருகிறது. 


இந்த ஆண்டு நவராத்திரி சுவாமி விக்ரகங்கள் 23-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன, அன்று காலையில் வேளிமலை குமாரசாமி பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும், பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையு டன் தொடங்கும். 


முன்னதாக மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி 23-ந்தேதி 7.30 முதல் 8. 30-க்குள் நடைபெறும், இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்பத்துறை தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 

No comments:

Post a Comment