கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலையில் அமர்ந்து ஆசிரியை போராட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலையில் அமர்ந்து ஆசிரியை போராட்டம்.

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் வேதியல், உயிரியல், தாவரவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், ஆகிய பாடப் பிரிவுகளும் கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் அடிப்படை மின்பொறியியல் ஆகிய தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.


கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் ஆகிய 2 பாடப்பிரிவுகள் 'திடீர்' என்று நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் இந்த 2 பாடப்பிரிவிலும் படித்து வந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பொருளாதாரம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். 


அதே சமயம் இந்த பாடப்பிரிவுகளை நடத்தி வந்த ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வே கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘திடீர்' என்று நிறுத்தப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரி வையும் உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


இதற்கிடையில் நிறுத்தப்பட்ட பாடப்பிரிவுகளை நடத்தி வந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை லட்சுமி இன்று காலை பள்ளிக்கு வந்தார். அவர் தனது நிலை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டார். அப்போது அவர் திடீரென சாலைக்கு வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment