கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று.
குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடிஉயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான இன்று 1008 சங்காபிஷேகம் நடை பெற்றது.
இதையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ்வரருக்கு 1008 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment