நாகர்கோவில் மாவட்ட காவல்துறை சார்பில் கைப்பந்து போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

நாகர்கோவில் மாவட்ட காவல்துறை சார்பில் கைப்பந்து போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

குமரி மாவட்டத்தின் அனைத்து துறைகளுடன் நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கைப்பந்து போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்ட வருவாய் துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, நாகர்கோவில் மாநகராட்சி, ஆயுதப்டை .ஊர்காவல் படை மற்றும் மாவட்ட காவல் துறை அணிகள் பங்கேற்று கலந்து கொண்டனர். 


போட்டியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன்பிரசாத் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மொத்தம் 7 அணிகள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் ஆயுதப்படை அணியும். தீயணைப்புத்துறை அணியும். மோதின இதில் ஆயுதப்படை அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. மூன்றாம் பரிசை வருவாய் துறை அணி பெற்றது.  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. முதல் பரிசு பெற்ற ஆயுதப்படை அணிக்கு வெற்றிக்கோப்பை பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத். மாநகராட்சி ஆணையர் மோகன். வனத்துறை அதிகாரி இளையராஜா. ஊர்க்காவல் படை மண்டல கமாண்டர் பிரகாஷ் .ஆகியோர் வழங்கினர்‌ நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை மாவட்ட அதிகாரி தென்னரசு .ஊர்க்காவல் படை கமாண்டர் மைதிலி .எஸ் பி இன்ஸ்பெக்டர் பெர்னால்டு. சேவியர். இன்ஸ்பெக்டர்கள் அருண். திருமுருகன். ராமர் .மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment