கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து அரசு துறைகளுடன் நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதனை எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாநகராட்சி ஆணையர் திரு. ஆனந்த் மோகன் இ. ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
நாகர்கோயில் அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் மாவட்ட வருவாய்த்துறை, நாகர்கோவில் மாநகராட்சி, வனத்துறை, தீயணைப்புத்துறை, ஆயுதப்படை, ஊர்காவல் படை, மற்றும் மாவட்ட காவல்துறை ஆகியவற்றில் இருந்து வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் ஆயுதப்படை போலீஸ் அணி முதல் பரிசு பெற்றது.

No comments:
Post a Comment