கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கட்டைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்த திருமதி.உஷா என்பவர் வாகன விபத்தில் காலமானார். அவரது மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் I.P.S அவர்களிடம் அப்பகுதி மக்கள் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகனங்களில் வேகத்தை குறைக்க அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கையின் பெயரில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் குளச்சல் போக்குவரத்து காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் உடனடி நடவடிக்கையாக வேகத்தடை அமைக்கபட்டது. கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment