பயிற்சி காவலர்களின் நிறைவு விழாவானது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது . இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், IPS. அவர்கள் பங்கேற்று பயிற்சி காவலர்களின் கவாத்து அணிவகுப்பினை பார்வையிட்டார் . இதில் பயிற்சி காவலர்கள் தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட கொடி அங்கீகார லோகோவை தங்கள் சீருடையில் அணிந்து கொண்டு காவல்துறை தலைவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் சிறந்த முறையில் கவாத்து, சட்டப்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு காவல்துறை தலைவர் அவர்கள் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். மேலும் பயிற்சி காவலர்கள் சிறந்த முறையில் காவல் பணி, செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களிடம் இன்முகத்தோட கூடிய வகையில் அணுகவேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.
இந்த பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் IAS, நாகர்கோயில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் IAS, மாவட்ட முதன்மை நீதிபதி அருள் முருகன், மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி மாயகிருஷ்ணனன், ISRO இயக்குநர் பத்ரி நாராயணமூர்த்தி CISF கமாண்டன்ட் திலீப் சாகர் கோலி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்
நிறைவு விழாவில் பயிற்சி காவலர்களின் Warrior Parade, களரி, கராத்தே நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments:
Post a Comment