மதுவிற்கு அடிமையான சிங்காரவேலன் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார். மனைவியை அடித்து உதைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது கொடுமை தாங்கமுடியாத ஜெயக்கொடி கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று சிங்காரவேலன் மது போதையில் இருந்தபோது குருணை மருந்தை கலந்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அவரது தாய் மூக்கம்மாள் உவரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குபதிவு செய்து இது தொடர்பாக சிங்காரவேலன் மனைவி ஜெயக் கொடியை கைது செய்தார். சம்பவ இடத்தை வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மனைவியே கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment