பூதப்பாண்டி மேல ரதவீதி பகுதியில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் அந்த பாம்பு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்தநிலையில் நேற்று காலையில் அங்கன்வாடி மையத்தை திறந்தபோது பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து பேருராட்சி தலைவர் அழகியயாண்டியபுரம் வனச்சரகர் மணி மாறனுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், வேட்டை தடுப்புக்காவலர் கவின் பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து அங்கன்வாடி மையத்துக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

No comments:
Post a Comment