குமரி மாவட்டம் தோவாளை தாலுகா தெள்ளாந்தியைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன். இவர் குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தில் பயிர் செய்திருந்த வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்களை இரண்டு முறை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
இதற்கான நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வன அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. அப்போது மணிகண்டனுக்கு முதல் முறை சேதப்படுத்தியதற்கு ரூ. 21, 425 - ம், அதே நிலத்தில் கடந்த மாதம் 9- ந் தேதியில் காட்டு யானைகளால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ. 50 ஆயிரமும் அவருடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதற்கான ஆவணங்களை நேற்று மணிகண்டனிடம், மாவட்ட வன அதிகாரி இளையராஜா வழங்கினார்.

No comments:
Post a Comment