இந்திய தொழிற்சங்க மையம் ( CITU) 15-வது தமிழ்நாடு மாநில மாநாடு வரும் நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. வரும் 6 ஆம் தேதி நாகர்கோவில் மாநகரத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ள செஞ்சட்டை பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெற உள்ளது என்றும் இந்த மாநாட்டில் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்களை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய தொழிற்சங்க மையம் ( CITU) மாநில செயலாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment