இதை அடுத்து குமரி- கேரளா எல்லை பகுதியான படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் கேரளாவிலிருந்து கோழி லாரிகள் மற்றும் கோழி முட்டை லாரிகள், கோழி தீவன வாகனங்கள் ஆகியவை தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டது.

மேலும் லாரிகள் மற்றும் வாகனங்கள் எங்கிருந்து வருகிறது என்ற விபரமும் சேகரிக்கப்படுகிறது. பிற மாநில வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மருந்துகள் தளிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருகேசன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சந்திரசேகர், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் எட்வர்ட் தாமஸ் மருத்துவ குழுவினர் ஜெப கிளாரி, டால்பின் பெனடிக் கால்நடை ஆய்வாளர் நாககுமாரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெபக்குமார் ஆகியோர் ஆகியோர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment