இந்நிலையில் விஜய் வசந்த் M.P குழித்துறை இரயில் நிலையத்தை ஆய்வு செய்து பயணிகளின் குறைகளையும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மக்கள் குழித்துறை இரயில் நிலையத்தில் மேம்பாலம் இல்லாததால் நீண்ட நாட்கள் அவதிப்படுவதாகவும், ரயில் வரும் நேரங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் இரயில்வே மேம்பாலம் வேண்டும் என்றும், அடிப்படை தேவைகள், லிப்ட் மற்றும் Foot Over Bridge, சர்வீஸ் ரோடு மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து வாரக் கடைசி நாளான சனி மாலை வேளாங்கண்ணிக்கு இரயில் இயக்கவும், தாம்பரம்-ஹைதராபாத் சார்மினர் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் அனந்தபுரி இரயிலை அதிவிரைவு இரயிலாக மாற்றி இயக்கவும், காலை வேளைகளில் திருவனந்தபுரம் திருநெல்வேலிக்கு MEMU இரயில் இயக்க வேண்டும் என்றும் மதுரை புனலூர் இரயில் கொரோனாவுக்கு பின் பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு இரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதாகவும் விஜய் வசந்த் அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது சம்மந்தமாக திருவனந்தபுரம் டிவிஷ்னல் அதிகாரிகளை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த ஆய்வின் போது காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவர் லைலா ரவிசங்கர், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வட்டார தலைவர் பாகோடு மோகன்தாஸ், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment