ஆகையால் இந்த மூன்று மாதங்களும் கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் என கருதப்படுகிறது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசன காலங்களில் இங்கு அதிகமான பக்தர்கள் வந்து குவிவது வழக்கமாக இருக்கும். மற்றும் கிறிஸ்துமஸ் புது வருட பிறப்பு அரையாண்டு தேர்வு விடுமுறை என விடுமுறைகள் இருப்பதால் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் என சுற்றுலாத்தலங்கள் ஒன்றான கன்னியாகுமரியில் அதிக சுற்றுலாக்கள் நிரம்பி வருவது வழக்கமாகும் கன்னியாகுமரியில் சீசன் காலங்களில் நடைபாதைகளில் சீசன் கடைகள் ஏலம் இடுவது வழக்கம் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீசன் கடைகளில் ஏலம் விடுவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதனால் கன்னியாகுமரி சீசன் கடைகள் ஏலம் விடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பணிகள் அதிக அளவில் வர தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீசன் கடைகள் ஏலம் விடுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சீசன் கடைகள் அமைப்பதில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீசன் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. கன்னியாகுமரி சீசன் கடைகள் அமைப்பது குறித்து வழக்கு இந்து விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என் பின்னரே சீசன் கடைகள் ஏலம் விடுவது பற்றி முன்னேறுபாடுகள் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment