மாணவர் சாவு விவகாரம் காதலி-பெற்றோரிடம் காதலி பெற்றோரிடம் போலீசார் விசாரனை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 October 2022

மாணவர் சாவு விவகாரம் காதலி-பெற்றோரிடம் காதலி பெற்றோரிடம் போலீசார் விசாரனை.


கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.

அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர், 


திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத் தனர். 


இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பானத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது, இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார். 


இந்த புகார் தொடர்பாக பாறசாலை போலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.


திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தைலமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். 


இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும் படி அறிவுறுத்தி உள்ளனர், இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது. 

No comments:

Post a Comment