
இந்நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்ட துணை செயலாளர் முகம்மது ராபி அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
1. கோவை கார் வெடி விபத்து
கோவையில் கார் சிலிண்டர் வெடி விபத்து நடந்தது. இந்த சம்பவத்தை ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் கண்டித்தது. இந்த வன்முறைக்கு எதிராக அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பிய நேரத்தில் பாசிச சிந்தனை கொண்டவர்கள் இதன்மூலம் மதவாத அரசியல் செய்ய திட்டமிட்டு காவல்துறைக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினர். பதட்டத்தை ஏற்படுத்த பந்த் அறிவித்தனர்.
பாசிச சக்திகளின் சதி வேலைகள் தமிழகத்தில் எடுபடாது என்பதையும் அதை முறியடிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிர பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதையும் இந்த செயற்குழு கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
2. பொது சிவில் சட்டம்
ஆளும் ஒன்றிய அரசு சிறுபான்மை சமுதாய மக்களை ஒடுக்குவதற்காக பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி செய்கிறது. வழிகாட்டு நெறி முறைகளில் பூரண மது விலக்கு கொண்டு வர வழிகாட்டபட்டுள்ளது. மக்கள் உயிரை குடிக்கும் பூரண மது விலக்கு நடைமுறை படுத்த எந்த சட்டமும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. ஆனால் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளதாக சொல்லி இஸ்லாமிய சமுதாயத்தை குறிவைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்பதை இந்த செயற்குழு கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்
3. தலை தூக்கும் சர்வாதிகாரம் அழிவின் விளிம்பில் ஜனநாயகம்.
இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம் பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது. பசுவின் பெயரால், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லபடுகின்றனர். பலர் சிறைச்சாலைகளில் தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் மீது கூட கடுமையான வழக்குகள் பதியப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் அப்ளிகேஷன் மூலமாக மானபங்கம் செய்யப்படுகின்றனர்.
ஹிஜாப் அனிய தடை, ஹலால் இறைச்சி தடை, ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது, என்று சொல்லில் அடங்காத துயரங்களை சுமந்து கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். முத்தலாக தடை சட்டம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஐ நீக்கியது. NIA விற்கு சிறப்பு அதிகாரங்கள், அடுத்து பொது சிவில் சட்டம் என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும் பாசிச பாஜக அரசு செய்து வருகிறது.
சர்வாதிகாரம் வளர்ந்து வருகிறது, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்படுகிறது, மதச்சார்பற்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெள்ளையரை எதிர்த்து முஸ்லிம்கள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தை ஆளும் ஒன்றிய அரசிற்கு இச்செயற்குழு வாயிலாக நினைவு படுத்துகிறோம். முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுடைய உரிமைகள் பாதுக்காக்க பட வேண்டும் என்று இந்த செயற்குழு கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
4. பித்அத் ஒழிப்பு மாநாடு
இன்ஷா அல்லாஹ் 2023 பிப்ரவரி 5 ம் தேதி பித்அத் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இறைத்தூதரின் போதனைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கும் அனாச்சாரங்களையும், மார்க்கத்தின் பெயரால் உருவாக்கபட்ட புதுமைகளையும் முழுமையாக கலைந்திட நம்முடைய பிரச்சாரக் களத்தை வீரியப்படுத்த வேண்டும்.
இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டடத்தின் அனைத்து கிளைகளிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் இம்மாவட்டத்தின் ஒவ்வொரு பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை கொண்டு செல்வதோடு ஆயிரக்கணக்கான மக்களை இம்மாநாட்டில் பங்கேற்க அழைத்து செல்வோம் என இந்த செயற்குழு கூட்டத்தின் வாயிலாக உறுதி ஏற்கிறோம்
5. தமிழகத்தில் இடஒதுக்கீடு
கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார். அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர்.
சிறுபான்மையினரான முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தின் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
6. வெள்ளை அறிக்கை
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது இன்று வரை முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் இருந்து வந்த நிலை மாறி இன்று தங்கள் சதவீதத்திற்கும் மிகக்குறைவாகவே ஒவ்வொரு அரசுத்துறையிலும், அதிகாரத்திலும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.


No comments:
Post a Comment