கன்னியாக்குமரி மாவட்டத்தின் மையப்பகுதியான தக்கலையில் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையான பஸ்நிலைய முன்பு, பல அரசு மற்றும் தனியார் அலுவலக பணிக்களுக்கு பல ஊர்களிலிருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்லும் சாலையில் ஆட்டோ ஸ்டேன்ட் அருகில் உள்ள மின்கம்பத்தில் மின்சார ஒயர்களும் இணைப்புகளும் மிக தாழ்வாக அதிகளவில் உள்ளது.

பல இணைப்பு ஒயர்களில் கரண்ட் செல்லும் கம்பிகள் வெளியே தெரிகின்றன அதில் டேப் சுற்றி மறைக்கவுமில்லை. சமீபத்தில் நெடுஞ்சாலை செப்பனிடும் விதமாக பழைய தார் ரோட்டை மில்லிங் செய்யாமல் அதன் மீது மீண்டும் தார் ரோடு அமைத்ததால் ரோட்டின் கனத்தின் உயரம் கூடியுள்ளது. மிக தாழ்வாக இருக்கும் இந்த மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளதால், அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.
மழைக்காலங்களில் மின்சாரம் தாக்கி உயிர் பலி ஆகிவிடுமோ என அச்சம் ஏற்படுகிறது, ஏனவே உயிர் பலி ஏற்படுமுன் சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு விடுத்துள்ளனர்.
.jpg)
No comments:
Post a Comment