கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட பராசக்தி கார்டன் பகுதியில் அரசு அனுமதியின்றி வாடகை வீட்டில் முதியோர்களை வைத்து எந்தவித உரிமம் இல்லாமல் முதியோர் இல்லம் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து மாவட்ட சமூகநல அலுவலர் அவர்கள் குழுவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசு அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்ட முதியோர் இல்லதிற்கு சீல் வைக்கபட்டது. விசாரணையில் கிருபை முதியோர் இல்லம் உரிமையாளர் சாந்தபுரத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவர் நடத்துவதாக விசாரணையில் தெரியவந்தது அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment