கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையில், மாநகராட்சியின் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து காவல்துறை சார்பில், சங்கரலிங்கம் மருத்துவமனை அருகில் குறுகிய சாலையில் சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டன.

இந்த சாலை குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அவ்வப்போது விபத்துக்களும் அரங்கேறி வருகிறது. இது குறித்து பலமுறை செய்திகள் வெளியான பின்னரும் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை மவுனம் காப்பது ஏனோ.?இதனால் முக்கியமாக பாதிக்கப்படுவது பள்ளி குழந்தைகள் முதல் வாகன ஓட்டிகள் தான், உயிர்பலி ஏற்படும் முன் விழித்து கொள்ளுமா மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை.?

No comments:
Post a Comment