டிச 06- பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்; நாகர்கோவிலில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 December 2022

டிச 06- பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்; நாகர்கோவிலில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!


பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் SDPI. கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் ஹுசைன், பொது செயலாளர் மணவை சாதிக் அலி அமைப்பு பொது செயலாளர் சாலிம், பொருளாளர் பைஞல் அகமது மற்றும் நிர்வாகிகள், தொகுதி நகர, கிளை தலைவர்கள் மற்றும், WIM. மாநில செயலாளர் ரஹ்மத் நிஷால், மாவட்ட தலைவர் ரிஸ்வானா பாபு, SDPI வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஹாகுல் ஹமீது, SDPI மீனவர் அணி மாவட்ட துணை தலைவர் ஆண்டனி பிரின்ஸ் முன்னிலை வகித்தனர். 


மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி வரவேற்புரையாற்றினார், மாதவலாயம் நகர செயலாளர் காஜா நிகழ்சியை தொகுத்து வழங்கினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சியின் வர்த்தக அணி மாநில பொது செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி , பச்சை தமிழகம் மாநில தலைவர் சுப. உதயகுமார், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், மாவட்ட சிறுபாண்மை கூட்டமைப்பு தலைவர் ஃபாதர் ஞானதாசன், பெரியார் தொழிலாளர் கழகம் மாவட்ட தலைவர் நீதி அரசர், ஏகத்துவ ஜமாஅத் மாநில பேச்சாளர் அப்துல் ஹமீது மஹ்ழரி  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். SDTU மாவட்ட தலைவர் முகைதீன் நாகூர் மீரான் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட. 300 க்கு மேற்பட்டோர் திரளானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment