நாகர்கோவிலில் தமுமுக சார்பில் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 December 2022

நாகர்கோவிலில் தமுமுக சார்பில் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.


டிசம்பர்-6  வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் குமரி மாவட்டத்தின் சார்பாக வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தமுமுக தலைவர் சுல்பிக்கர் அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட மமக செயலாளர் பீர் முஹைதீன், மாவட்ட பொருளாளர் பீர் முஹம்மது, மாவட்ட துணை தலைவர் அபூபக்கர் சித்திக், மாவட்ட தமுமுக துணை செயலாளர் பீர் முஹம்மது, மாவட்ட தமுமுக துணை செயலாளர் ஷேக் முஹம்மது, மாவட்ட தமுமுக துணை செயலாளர் மாஹீன்,மமக மாவட்ட துணை செயலாளர் லாயம் சலீம்,மாவட்ட IPP செயலாளர் அசிம் நிஷார், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அல்ஆமீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நிஷார், SMI மாவட்ட செயலாளர் ஆரிப், மற்றும் திருவை பேரூர் மமக கவுன்சிலர் சஹானா சுல்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியின் துவக்க உரையாக மாவட்ட தமுமுக செயலாளர் சுலைமான் நிகழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் கண்டன உரையாக மாவட்ட மமக துணை செயலாளர் சகாப்தீன், குளச்சல் நகர தலைவர் பைரோஸ் ஹாஜா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சுரேந்திரன், விசிக சார்பில் திருமாவேந்தன், குமரிமாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பு தலைவர் போதகர். ஞான தாசன், பச்சை தமிழன் கட்சி நிறுவனர் உதயகுமார் மற்றும் தமுமுக மாநில பிரதிநிதி வழக்கறிஞர். நூர்த்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்தினார்கள்.

நிகழ்ச்சியில், தக்கலை, திங்கள் நகர், நாகர்கோவில், திருவிதாங்கோடு, குளச்சல், தேங்கை, சூரங்குடி கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளாக ஆண்களும் பெண்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். நிகழ்வின் இறுதியாக நாகர்கோவில் கிளை தலைவர் ஷேக் செய்யது அலி நன்றியுரை கூறினார். 

No comments:

Post a Comment