கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 December 2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேக்கோடு மற்றும் காணிமடம்  பகுதியில் 45 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரண்டு நாள் பயணமாக   கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு பணி மற்றும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை துவக்கி  வைக்க வருகை தந்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ்  முன்னிலையில் குருந்தன்கோடு ஒன்றியம் நெய்யூர் பேரூராட்சி பகுதியில் 20 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட  மேக்கோடு துணை சுகாதார நிலையம் மற்றும் காணிமடம்  பகுதியில் 45 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.   


நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி  சந்திரா, மாவட்ட அவைத்தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணை  செயலாளர் பூதலிங்கம் பேரூர் செயலாளர்  செல்வதாஸ் சட்டம்ன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment